கிரிக்கெட் (Cricket)

டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்: கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்த நியூசிலாந்து வீரர்

Published On 2025-06-14 00:57 IST   |   Update On 2025-06-14 00:57:00 IST
  • அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட்டின் 3வது சீசன் நடந்து வருகிறது.
  • இதன் லீக் போட்டி ஒன்றில் சான் பிரான்சிஸ்கோ அணி வெற்றி பெற்றது.

ஆக்லாந்து:

அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட்டின் 3வது சீசன் நடந்து வருகிறது.

இதன் லீக் போட்டி ஒன்றில் சான் பிரான்சிஸ்கோ அணியும், வாஷிங்டன் அணியும் மோதின. முதலில் ஆடிய சான் பிராசின்ஸ்கோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 269 ரன்கள் குவித்தது.

அடுத்து ஆடிய வாஷிங்டன் அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் சான் பிரான்சிஸ்கோ அணி 123 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் அசத்திய சான் பிரான்சிஸ்கோ அணியின் நியூசிலாந்து வீரர் பின் ஆலன் 51 பந்தில், 19 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 151 ரன் குவித்து வெற்றிக்கு வழி வகுத்தார்.

இந்நிலையில், டி 20 அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் பின் ஆலன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல், எஸ்டோனியாவின் சாஹில் சவுகான் ஆகியோர் தலா 18 சிக்சர் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News