டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்கள்: வரலாறு படைத்த டூ பிளசிஸ்
- எஸ்.ஏ. டி20 லீக் கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
- பாப் டூ பிளசிஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்துள்ளார்.
கேப் டவுன்:
எஸ்.ஏ.20 லீக் என்றழைப்படும் தென் ஆப்பிரிக்க டி20 கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த லீக் போட்டியில் எம்.ஐ.கேப்டவுன் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மழை காரணமாக இந்தப் போட்டி 12 ஓவராகக் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற கேப்டவுன் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பாப் டூ பிளசிஸ் 44 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து ஆடிய எம்ஐ கேப்டவுன் அணி முதலில் தடுமாறியது. இருப்பினும் அந்த அணி 11.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் 44 ரன்களை சேர்த்ததன் மூலம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பாப் டூ பிளசிஸ் டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12,000 ரன்களைக் கடந்த முதல் தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.