கிரிக்கெட் (Cricket)

கடைசி வரை திக்..! திக்..! ஜடேஜா போராட்டம் வீண்: லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து த்ரில் வெற்றி

Published On 2025-07-14 21:25 IST   |   Update On 2025-07-14 21:25:00 IST
  • மதிய உணவு இடைவேளைக்குள் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்தது.
  • ஜடேஜா கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் வெற்றிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்றைய 4ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தார்.

இன்று 5ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எல். ராகுல் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் க்ளீன் போல்டானார். மறுமுனையில் விளையாடிய கே.எல். ராகுல் 39 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் ரன்ஏதும் எடுக்காமல் ஆர்ச்சர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 82 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றி பெற்ற 111 ரன்கள் தேவைப்பட்டது.

8ஆவது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் நிதிஷ் ரெட்டி களம் இறங்கினார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. மதிய உணவு இடைவேளைக்கு சற்று முன் நிதிஷ் ரெட்டி (13) கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. 83 ரன்கள் தேவைப்பட்டது. ஜடேஜா 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

மதிய உணவு இடைவேளை முடிவடைந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் ஜடேஜா உடன் பும்ரா ஜோடி சேர்ந்தார்.

இருவரும் நம்பிக்கையுடன் விளையாடினர். முடிந்த அளவிற்கு பந்துகளை தடுத்து விளையாடினர். இதனால் ஓவருக்கு ஒரு ரன் என்ற அடிப்படையில் வந்தது. 62ஆது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தை பும்ரா தூக்கி அடிக்க, எளிதாக கேட்ச் பிடித்தனர். இதனால் இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்தது. பும்ரா 54 பந்தில் 5 ரன்கள் எடுத்தார்.

பும்ரா ஆட்டமிழக்கும்போது இந்தியாவுக்கு 46 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி விக்கெட்டாக சிராஜ் களம் இறங்கினார். ஜடேஜா அரைசதம் கடந்து வெற்றிக்காக போராடினார். தேனீர் இடைவேளை வரை சிராஜ் தாக்குப்பிடித்தார். அப்போது இந்தியா 163 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா 56 ரன்களுடனும், சிராஜ் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தேனீர்இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. பஷீர் வீசிய பந்தை சிராஜ் தடுத்து ஆடினார். பந்து பேட்டில் பட்டு ஸ்டம்பை தாக்கியது. இதனால் இந்தியா 170 ரன்னில் ஆல்அவுட் ஆகி 22 ரன்னில் தோல்வியைத் தழுவியது. ஜடேஜா 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து மற்றும் இந்தியா முதல் இன்னிங்சில் தலா 387 ரன்கள் சேர்த்தன. 2ஆவது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்கள் அடித்தது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

Tags:    

Similar News