கிரிக்கெட் (Cricket)
முதல் இன்னிங்சை தொடர்ந்து 2ஆவது இன்னிங்சிலும் சதம் விளாசினார் ரிஷப் பண்ட்
- 83 பந்தில் அரைசதம் அடித்திருந்தார்.
- 130 பந்தில் சதம் விளாசினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்டின் இன்றைய 4ஆவது நாள் ஆட்டத்தில் இந்தியா 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. சுப்மன் கில் 8 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில் ரிஷப் பண்ட் களம் இறங்கினார். இவர் கே.எல். ராகுல் உடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
83 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் கடந்ததும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சதத்தை நோக்கி வீறுநடை போட்டார். கடைசியில் 130 பந்தில் சதம் விளாசினார்.
முதல் இன்னிங்சிலும் ரிஷப் பண்ட் சதம் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்சில் 134 ரன்கள் விளாசியிருந்தார்.