கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: சிக்சர் மூலம் சதம் விளாசிய ரிஷப் பண்ட்

Published On 2025-06-21 16:48 IST   |   Update On 2025-06-21 16:48:00 IST
  • 10 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் விளாசினார்.
  • சதம் அடிக்க 146 பந்துகள் எடுத்துக் கொண்டார்.

இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் லீட்சில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜெய்ஸ்வால் (101), சுப்மன் கில் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் குவித்தது. சுப்மன் கில் 127 ரன்னுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ரிஷப் பண்ட் தனது ஆட்டத்தை துரிதப்படுத்தினார். இதற்கிடையே முதல் ஒரு மணி நேரத்தில் இருவரும் விக்கெட் இழப்பாமல் பார்த்துக் கொண்டனர்.

ரிஷப் பண்ட் சதத்தை நோக்கி முன்னேறிச் சென்றார். 100ஆவது ஓவரை பசீர் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி ரிஷப் பண்ட் 146 பந்தில் சதம் அடித்தார். அவரது ஸ்கோரில் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரின் 7ஆவது சதம் இதுவாகும்.

Tags:    

Similar News