கிரிக்கெட் (Cricket)

ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால் டெல்லியில் குல்தீப் யாதவுக்கு அதிக விக்கெட்: வாஷிங்டன் சுந்தர்

Published On 2025-10-13 19:44 IST   |   Update On 2025-10-13 19:44:00 IST
  • டெல்லி டெஸ்டில் குல்தீப் யாதவ் 55.5 ஓவர்கள் வீசி 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
  • ஜடேஜா 52 ஓவர்கள் வீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு அணிகளிலும் சேர்த்து நான்கு சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீசை இந்திய அணி பந்து வீச்சாளர்கள் எளிதாக அவுட்டாக்கிவிட்டனர். ஆனால், 2ஆவது இன்னிங்சில் கடுமையான வகையில் பந்து வீச வேண்டியிருந்தது.

இந்திய பந்து வீச்சாளர்கள் 118.5 ஓவர்கள் வீசினர். சுழற்பந்து வீச்சாள்கள் 95 ஓவர்கள் வீசி 5 விக்கெட் வீழ்த்தினர். பும்ரா, சிராஜ் ஆகியோர் முறையே 3, 2 என 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் 8 விக்கெட் வீழ்த்திய நிலையில், 2ஆவது இன்னிங்சிலா் 5 விக்கெட்டுதான் கிடைத்தது.

குல்தீப் யாதவ் 55.5 ஓவரில் 186 ஓவர்கள் வீசி 8 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 36 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டும், ஜடேஜா 52 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

சுழற்பந்து வீச்சுக்கு சவாலான இந்த ஆடுகளத்தில், குல்தீப் யாதவ் ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால் கூடுதலாக விக்கெட் வீழ்த்தினார் என்று வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வாஷிங்டன் சுந்தர் கூறியதாவது:-

குல்தீப் யாதவ் உண்மையிலேயே நன்றாக பந்து வீசினார் என்று நினைக்கிறேன். அவர் மிகவும் சிறப்பான சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தார். அவர் ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால், இங்கே சற்று கூடுதலாக அறுவடை செய்துள்ளார். இங்கு உண்மையிலேயே உதவியதாக இருந்தது.

எல்லா பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் கூட தைரியமாக வீசினார். ஆகவே, இந்த ஆடுகளத்தில் 20 விக்கெட் வீழ்த்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 

Tags:    

Similar News