கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இருந்து பாபர் அசாம், ஷாஹீன் அஃப்ரிடி அதிரடியாக நீக்கம்

Published On 2024-10-13 17:11 IST   |   Update On 2024-10-13 17:11:00 IST
  • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது பாகிஸ்தான்.
  • தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சிலும் ஆல் அவுட்டானது.

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வீரர்கள் பாபர் அசாம், ஷாஹீன் அஃப்ரிடி, மற்றும் நசீம் ஷா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டி முல்தான் மைதானத்தில் அக்டோபர் 15 - 19 வரை நடைபெறவுள்ளது. 3 ஆவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24 - 28 வரை நடைபெறவுள்ளது.

Tags:    

Similar News