அதிகமாக விமர்சித்துள்ளேன்., ஆனால், ஹர்சித் ராணாவை பாராட்டிய ஸ்ரீகாந்த்
- ஹர்சித் ராணா சூப்பராக பந்து வீசினார். ஒரு நாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுப்பது மிகப்பெரிய சாதனை.
- சிட்னி போட்டியில் ஷார்ட் பந்து வீசவில்லை. மேலும், அதிகமான Slow Ball வீச முயற்சி செய்யவில்லை.
இந்தியாவின் மூன்று வடிவிலான கிரிக்கெட் அணியிலும் ஹர்சித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை, இந்திய அணியில் முன்னாள் தேர்வாளரான ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று சிட்னி போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியாவை 236 ரன்னில் சுருட்ட, முக்கிய பங்காற்றிய ஹர்சித் ராணாவை ஸ்ரீகாந்த் வெகுவாக பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஹர்சித் ராணா சூப்பராக பந்து வீசினார். ஒரு நாள் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுப்பது மிகப்பெரிய சாதனை. அவர் வீழ்த்திய 4 விக்கெட்டுகளில் ஓவன் விக்கெட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சூப்பர் டெலிவரி, ரோகித் சர்மா சிறப்பாக கேட்ச் பிடித்தார்.
பயங்கரமான லைன் மற்றும் லெந்த் பிடித்து பந்து வீசினார். கடந்த போட்டியில் கடைசி நேரத்தில் மோசமாக பந்து வீசினார். சிட்னியில் சிறப்பாக பந்து வீசினார்.
சிட்னி போட்டியில் ஷார்ட் பந்து வீசவில்லை. மேலும், அதிகமான Slow Ball வீச முயற்சி செய்யவில்லை. சிட்னி போட்டிக்காக அனைத்து பாராட்டுக்கும் தகுதியான ஹர்சித் ராணா.
ஆமாம், அவரை நான் அதிக அளவில் விமர்சனம் செய்துள்ளேன. ஆனால் இறுதியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கடந்த போட்டியில் பேட்டிங் செய்தது மற்றும் கடைசி ஸ்பெல்லில் பயங்கரமாக பந்து வீசியதன் மூலம், இந்த போட்டிக்கு நம்பிக்கையை எடுத்து வந்துள்ளார்.
இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.