null
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த இலங்கை வீரர் மேத்யூஸ்
- ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்
- ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவிப்பு. ஜூன் 17ம் தேதி தொடங்கும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார்.
இலங்கை அணி நிர்வாகம் விரும்பும் பட்சத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடத் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
இவர் 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி (சராசரி: 45), 16 சதங்களுடன் 8,167 ரன்கள் விளாசியுள்ளார். 226 ஒருநாள் போட்டிகள், 5,916 ரன்கள் (சராசரி: 40), 3 சதங்கள் விளாசினார். பந்து வீச்சில் 120 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் 90 டி20 போட்டிகளில் 1,416 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 அரைசதங்கள் அடங்கும்.
இவர் இலங்கை அணிக்காக பல சாதனைகளை புரிந்துள்ளார். அதன்படி, 2014 டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
மேலும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி மற்றும் 2009, 2012 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் இலங்கை அணியின் வீரராக மேத்யூஸ் இருந்தார்.
2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் லசித் மாலிங்காவுடன் இணைந்து 9-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் 132 ரன்கள் என்ற உலக சாதனையை படைத்தார்.
2014 ஆசியக் கோப்பையை இலங்கை அணி மேத்யூஸ் தலைமையில் கைப்பற்றியது.
2023 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக "டைம்டு அவுட்" முறையில் ஆட்டமிழந்தவர் என்ற சாதனையயும் மேத்யூஸ் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.