கிரிக்கெட் (Cricket)
முதல் ஒருநாள் போட்டி: 222 இலக்கை எட்டி வங்கதேசத்திற்கு அதிர்ச்சி அளிக்குமா ஆப்கானிஸ்தான்?
- தவ்ஹித் ஹ்ரிடோய் (56), கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் (60) அரைசதம் அடித்தனர்.
- ஓமர்சாய், ரஷித் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
ஆப்கானிஸ்தான்- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அபுதாபியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய வங்கதேச அணியால் 221 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. ஓமர்சார், ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்த வங்கதேசம் 48.5 ஓவரில் ஆல்அவுட் ஆனது.
வங்கதேச அணியின் முதல் மூன்று வீரர்கள் சைஃப் ஹசன் (26), தன்சித் ஹசன் (10), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (2) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த தவ்ஹித் ஹ்ரிடோய் (56), கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் (60) அரைசதம் அடித்தனர். இதனால் வங்கதேச அணி 221 ரன்கள் அடித்தது.
முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் 3-0 எனக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.