வீரர்கள் கைக்குலுக்காத விவகாரம்: கார்கில் போரின்போது 1999 உலகக்கோப்பையில்.., நினைவு கூறும் சசி தரூர்
- ஆசிய கோப்பை போட்டியின்போது இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வீரர்களுடன் கைக்குலுக்க மறுப்பு.
- பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடரில் இருந்து விலகப்போவதாக மிரட்டல் விடுத்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைக்குலுக்க மறுத்துவிட்டனர். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கடும் ஆட்சேபனை தெரிவித்தது.
சூப்பர் 4 சுற்றின்போது பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்கு எதிராக ஸ்லெட்ஜிங் என்ற பெயரில் சிந்தூர் ஆபரேஷன் நடவடிக்கையின்போது இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என சைகை காட்டினர். இதனால் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் ஐசிசி-யில் புகார் அளித்துள்ளன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி எம்.பி. சசி தரூர் இது தொடர்பாக கூறுகையில் "அரசியல் டென்சனில் இருந்து கிரிக்கெட் ஸ்பிரிட் எப்போதும் தனித்து இருக்க வேண்டும். கார்கில் போரின்போது 1999 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது வீரர்கள் கைக்குலுக்கினர். இரு தரப்பினரிடமிருந்தும் பழிவாங்கும் சைகைகள் விளையாட்டு மனப்பான்மையின்மையை வெளிப்படுத்துகிறது" என்றார்.