விளையாட்டு

ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி: 50 தங்க பதக்கங்களை வென்று வரலாறு படைத்தது இந்தியா

Published On 2025-08-31 11:01 IST   |   Update On 2025-08-31 11:01:00 IST
  • ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா மொத்தம் 99 பதக்கங்களை வென்றுள்ளது
  • இந்தியா 26 வெள்ளி, 23 வெண்கல பதக்கம் வென்றுள்ளது.

16 ஆவது ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்றது.

ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா 99 பதக்கங்களை வென்று, முதலிடம் பிடித்து வரலாறு படைத்தது. இந்த 99 பதக்கங்களில் 50 தங்கம், 26 வெள்ளி, 23 வெண்கல பதக்கமும் அடக்கம்.

கஜகஸ்தான் 21 தங்கம் உள்பட 70 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தையும், சீனா 15 தங்கம் உள்பட 37 பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

Tags:    

Similar News