விளையாட்டு

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

Published On 2023-10-23 10:35 GMT   |   Update On 2023-10-23 10:36 GMT
  • ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அங்குர் தாமா தங்கப்பதக்கம்.
  • இந்தியா, 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட 15 பதக்கங்களை வென்றுள்ளது.

சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நேற்று முதல் பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வரும் 28ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டில் இந்தியாவில் இருந்து 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பாரா ஆசிய போட்டியில் பதக்க வேட்டையை இந்தியா தொடங்கியுள்ளது. இதில், ஆடவர் உயரம் தாண்டுதலில் சைலேஷ் குமார் தங்கம் வென்றுள்ளார். தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம், ராம் சிங் வெண்கலமும் வென்றார்.

ஆடவர் உயரம் தாண்டுதலில் 3 பதக்கங்களையும் இந்தியா வென்று அசத்தியது. இதைதொடர்ந்து, ஆடவர் F51 கிளப் எறிதல் போட்டியிலும் இந்தியா தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

அதன்படி, F51 கிளப் எறிதல் போட்டியில் இந்திய வீரர் பிரணவ் சூர்மா தங்கம் வென்றார். தொடர்ந்து, தரம்பிட் , அமித் குமார் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இந்த போட்டி தொடரில் இன்று நடைப்பெற்ற ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அங்குர் தாமா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

தற்போதுவரை இந்தியா, 5 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் உட்பட 15 பதக்கங்களுடன் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது.

Another Golden Triumph for ?? at #AsianParaGames ?#ParaAthletics

Tags:    

Similar News