விளையாட்டு

கண்களை கட்டிக்கொண்டு 64 அம்புகளை எய்து 7 வயது சிறுவன் சித்தார்த் இரட்டை சாதனை

Published On 2025-11-24 12:39 IST   |   Update On 2025-11-24 12:39:00 IST
  • சிறுவன் 12 நிமிடங்களில் சுமார் 64 அம்புகளை எய்து அசத்தினார்.
  • இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் H வினோத் கலந்துகொண்டார்.

கண்களை கட்டிக்கொண்டு 64 அம்புகளை எய்து 7 வயது சிறுவன் சித்தார்த் இரட்டை சாதனை படைத்துள்ளார். இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகங்களில் அங்கீகாரம் பெறுள்ளார்.

சென்னை நந்தனம் YMCA உடற்கல்வி கல்லூரி வளாகத்தில் உள்ள வில்வித்தை மைதானத்தில், 7 வயது சிறுவன் கண்களை கட்டிக் கொண்டு, காம்பவுண்ட் வில் மூலமாக 7 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை நோக்கி, அம்புகளை எரியும் சாதனை முயற்சி நடைபெற்றது.

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய புத்தகங்களில் அங்கீகாரம் பெறும் வகையிலான இந்த சாதனை நிகழ்ச்சியில் 7 வயதே நிரம்பிய சித்தார்த் பன்னீர் எனும் சிறுவன் 12 நிமிடங்களில் சுமார் 64 அம்புகளை எய்து அசத்தினார்.

குறிப்பாக இந்தியாவில் முதன்முதலாக தயாரிக்கபட்டுள்ள காம்பவுண்ட் வில் மூலமாக சிறுவன் சித்தார்த் அம்புகளை எறிந்ததும், இதற்கு முன்னதாக கண்களை கட்டிக்கொண்டு இந்த சாதனையை யாரும் முயற்சி செய்ததில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. சித்தார்த்தின் முயற்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவருக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்கள், சாதனைக்கான சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் H வினோத், இரா சரவணன் ஆகியோர் வருகை புரிந்தனர்.

இதுகுறித்து பேசிய சித்தார்த்தின் தந்தை கரிகாலன், "எனது மகனை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வைப்பதே இலக்கு என்றும், இந்த இரட்டை சாதனைகள் புரிந்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News