விளையாட்டு
ரபேல் நடால்- அலெக்சாண்டர் ஸ்வெரேவ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு நடால் முன்னேறுவாரா? ஸ்வெரேவ்வுடன் இன்று மோதல்

Published On 2022-06-03 06:27 GMT   |   Update On 2022-06-03 06:27 GMT
கடந்த பிரெஞ்ச் ஓபன் அரை இறுதிகளில் தோல்வியடைந்த நடால்-ஸ்வெரேவ் இந்த முறை அரை இறுதியில் மோதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரீஸ்:

கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

ஆண்கள் ஒன்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 6.15 மணிக்கு நடக்கும் அரை இறுதி போட்டியில் 5-ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்), 3-ம் நிலை வீரர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) மோதுகிறார்கள்.

21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள நடால், பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 13 முறை கைப்பற்றியுள்ளார். அவர் 14-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளார்.

ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் அரை இறுதியில் தோற்றார். இந்த முறை வென்று இறுதிப் போட்டிக்குள் நுழையும் முனைப்பில் உள்ளார்.

ஆனால் களிமண் தரையில் சிறப்பாக விளையாடும் நடாலுக்கு எதிராக கடுமையாக போராட வேண்டியதிருக்கும். இதனால் ஸ்வெரேவ் முழு திறமையை வெளிப்படுத்துவது அவசியம்.

கடந்த பிரெஞ்ச் ஓபன் அரை இறுதிகளில் தோல்வியடைந்த நடால்-ஸ்வெரேவ் இந்த முறை அரை இறுதியில் மோதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு 9 மணிக்கு நடக்கும் மற்றொரு அரை இறுதியில் 8-ம் நிலை வீரர் கேஸ்பர் ரூட் (நார்வே)-20-ம் நிலை வீரர் மரின் சிலிச் (குரேஷியா) மோது கிறார்கள். இவர்கள் இருவரும் பிரெஞ்ச் ஓபனில் முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News