விளையாட்டு
நவோமி ஒசாகா

பிரெஞ்ச் ஓபன் - ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி

Update: 2022-05-23 19:47 GMT
பிரெஞ்ச் ஓபன் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பாரீஸ்:

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகா, அமெரிக்காவைச் சேர்ந்த அமெண்டா அனிசிமோவாவை எதிர்கொண்டார்.

இதில் நவோமி ஒசாகா 5-7, 4-6 என்ற நேர் செட்களில் அனிசிமோவாவிடம் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.
Tags:    

Similar News