விளையாட்டு
ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் 2022: பெங்களூரு அணிக்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத்

Published On 2022-05-19 21:46 IST   |   Update On 2022-05-19 22:14:00 IST
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகின்றன.
மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன.

மும்பை வாங்கடே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் குஜராத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனால், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 47 பந்துகளில் மூன்று 6, 4 பவுண்டரிகளுடன் 62 ரன்களை எடுத்தார். தொடர்ந்து, டேவிட் மில்லர் 34 ரன்கள், விரிதிமான் சாஹா 31 ரன்கள், ராஷித் கான் 19 ரன்கள், வேத் 16 ரன்கள், ராகுல் திவாதியா 2 ரன்கள் மற்றும் ஷூப்மான் கில் ஒரு ரன்னும் எடுத்தனர்.

பெங்களூரு அணி தரப்பில் விளையாடிய ஹசல்வூட் 2 விக்கெட்டும், மேக்ஸ்வெல் மற்றும் ஹசாரங்கா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்கள்..  மத்திய, மாநில உரிமையை மீறி நடவடிக்கை எடுக்க, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை - பழனிவேல் தியாகராஜன்

Similar News