விளையாட்டு
மூசா யாமக்

தோல்வியே கண்டிராத குத்துச்சண்டை வீரர் மாரடைப்பால் போட்டியின்போது மரணம்

Published On 2022-05-19 09:31 GMT   |   Update On 2022-05-19 10:25 GMT
யாமக் ஐரோப்பிய மற்றும் ஆசிய சாம்பியன் பட்டங்களை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூனிச்:

தோல்வியே கண்டிராதா குத்துச்சண்டை வீரர் மூசா யாமக், போட்டியின்போது மாரடைப்பால் விழுந்து உயிரிழந்தார்.

ஜெர்மனியை சேர்ந்த 38 வயதான மூசா யாமக், மூனிச்சில் நடைபெற்ற போட்டியில் உகாந்தா வீரர் ஹாம்சா வாண்டதராவை எதிர்கொண்டார். 

போட்டி பரபரப்பாக சென்றுகொண்டிருந்தபோது 3வது சுற்றுக்கு முன் மூசா யாமக் குத்துச் சண்டை வளையத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கே மருத்துவ குழு வந்து பார்த்தபோது அவருக்கு மாரடைப்பு என தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே இறந்துவிட்டார்.

இந்த மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மூசா யாமக் 8-0 என்ற கணக்கில் தோற்கடிக்கப்படாத வீரராக இருந்தார். மேலும் இவரது அனைத்து வெற்றிகளும் நாக்-அவுட் மூலம் பெற்றவை என்ற புகழும் இவருக்கு உண்டு.

யாமக் ஐரோப்பிய மற்றும் ஆசிய சாம்பியன் பட்டங்களை வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News