விளையாட்டு
நோவக் ஜோகோவிச்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார் ஜோகோவிச்

Published On 2022-05-12 20:30 GMT   |   Update On 2022-05-12 20:30 GMT
இந்த வெற்றியின் மூலம் 16 முறையாக நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் வீரர் என்ற பெருமை நோவக் ஜோகோவிச்சிற்கு கிடைத்துள்ளது-
ரோம் :

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில்  நேற்று  நடைபெற்ற 3-வது சுற்று போட்டி ஒன்றில்  டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் , ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்

இந்த ஆட்டத்தில் 6-2,6-2,என்ற நேர் செட் கணக்கில்  ஜோகோவிச் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம்  ஆயிரமாவது மாஸ்டர் போட்டி ஒற்றையர் பிரிவில் 16வது முறையாக நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
Tags:    

Similar News