விளையாட்டு
சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் 2022: 97 ரன்களில் ஆல் அவுட் ஆனது சிஎஸ்கே- மும்பைக்கு 98 ரன்கள் இலக்கு நிர்ணயம்

Update: 2022-05-12 15:54 GMT
அதிகபட்சமாக சிஎஸ்கே கேப்டன் தோனி 36 ரன்கள் எடுத்தார்.
மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால், முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 16 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி 33 பந்துகளின் இரண்டு 6, 4 பவுண்டரிகளுடன் 36 ரன்களை எடுத்தார். தொடர்ந்து, பிராவோ 12 ரன்கள், அம்பதி ராயுடு மற்றும் ஷிவம் துபே ஆகியோர் தலா 10 ரன்களும் எடுத்தனர். ருத்துராஜ் 7 ரன்கள், முகேஷ் சவுதரி 4 ரன்கள், சிமர்ஜீத் சிங் 2 ரன்கள், உத்தப்பா ஒரு ரன் எடுத்தனர்.

மும்பை அணி தரப்பில் டேனியல் சேம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து, ரிலே மெரெடித் மற்றும் குமார் கார்த்திகேயா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், பும்ரா மற்றும் ரமன்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.

இதையும் படியுங்கள்.. கே.எல் ராகுல் திருமணம் எப்போது? - மனம் திறந்த காதலியின் தந்தை
Tags:    

Similar News