விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்க்ஸ்

தொடக்க ஜோடி அபாரம்- டெல்லிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சிஎஸ்கே

Published On 2022-05-08 16:23 GMT   |   Update On 2022-05-08 16:23 GMT
இந்த போட்டியில் கான்வே 49 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 87 ரன்கள் விளாசினார்.
மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

தொடக்க ஜோடி 11 ஓவரில் 110 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கான்வே 49 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸருடன் 87 ரன்கள் விளாசினார். தொடர்ந்து, ருத்துராஜ் 41 ரன்களும், ஷிவம் துபே 32 ரன்களும், தோனி 21 (நாட் அவுட்) ரன்களும், அம்பதி ராயுடு 5, பிராவோ ஒரு ரன்னும் (நாட் அவுட்) எடுத்தனர்.

டெல்லி கேப்பிடல்ஸ் தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே 3 விக்கெட்டும், கலீல் அகமது 2 விக்கெட்டும், மிட்சல் மார்ஷ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.

இதையும் படியுங்கள்..   ஹசாராங்கா அபாரம்: ஐதராபாத்தை வீழ்த்தியது பெங்களூரு அணி
Tags:    

Similar News