விளையாட்டு
இந்திய விளையாட்டு வீரர்கள் , பிரதமர் மோடி

டெப்லிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2022-05-02 00:03 IST   |   Update On 2022-05-02 00:03:00 IST
விளையாட்டு போட்டியில் பங்கேற்க புறப்படுவதற்கு முன்பு தேசிய போர் நினைவகத்தைப் அவர்கள் பார்வையிட்டது தம்மை மிகவும் கவர்ந்தது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:

செவித்திறன் இழந்தோருக்கான டெப்லிம்பிக் 2021,  விளையாட்டுப் போட்டிகள் பிரேசில் நாட்டில் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்பதற்காக இந்தி தடகள வீரர்கள் பிரேசில் சென்றுள்ளனர். 

அவர்களுக்கு பிரதமர் மோடி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக  தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது;

இன்று தொடங்கும் # Deaflympics2021 -ல்  இந்தியா நமது  குழுவை உற்சாகப்படுத்துகிறது. நமது  திறமையான விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
விளையாட்டு போட்டிக்கு புறப்படுவதற்கு  முன் தேசிய போர் நினைவகத்தைப் பார்வையிட்ட அவர்களின் செயல்  என்னை மிகவும் கவர்ந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News