விளையாட்டு
அரை சதமடித்த கே.எல்.ராகுல், தீபக் ஹூடா

கே.எல்.ராகுல், தீபக் ஹூடா அரை சதம் - டெல்லி வெற்றிபெற 196 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ

Published On 2022-05-01 11:55 GMT   |   Update On 2022-05-01 11:55 GMT
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கே.எல்.ராகுல், தீபக் ஹூடா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்தது.
மும்பை:

15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, லக்னோ அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், குயிண்டன் டி காக் இறங்கினர்.

அணியின் எண்ணிக்கை 42 ஆக இருந்தபோது டி காக் 23 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய தீபக் ஹூடா கேப்டன் ராகுலுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் அணியின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்தனர்.

தீபக் ஹூடா 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் 77 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், லக்னோ அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.

டெல்லி அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் கைப்பற்றினார்.
Tags:    

Similar News