விளையாட்டு
ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல்

ஐபிஎல் - டெல்லிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று லக்னோ பேட்டிங் தேர்வு

Published On 2022-05-01 15:08 IST   |   Update On 2022-05-01 15:08:00 IST
கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி தான் ஆடிய 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.
மும்பை:

15-வது ஐ.பி.எல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 45-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் ஆவேஷ் கானுக்கு பதிலாக கிருஷ்ணப்பா கவுதம் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து, லக்னோ அணி முதலில் பேட் செய்ய களமிறங்குகிறது.

ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி தான் ஆடிய 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது நீடிக்கிறது.

Similar News