விளையாட்டு
பி.வி.சிந்து

சுவிஸ் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

Update: 2022-03-27 11:47 GMT
ஐதராபாத்தைச் சேர்ந்த பி.வி.சிந்து, தாய்லாந்து வீராங்கனை பூசனனுடன் 17 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். இதில் 16 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்.
பாசெல்:

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், தாய்லாந்தைச் சேர்ந்த பூசனனுடன் பலப்பரீட்சை நடத்திய சிந்து, 49 நிமிடங்களில் 21-16, 21-8 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார்.

ஐதராபாத்தைச் சேர்ந்த பி.வி.சிந்து, இதுவரை பூசனனுடன் 17 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். அதில் 16 முறை சிந்து வெற்றி பெற்றிருக்கிறார். 2019ல் ஹாங்காங் ஓபனில் மட்டும் தோல்வி அடைந்துள்ளார். 

இந்த சீசனில் இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் சிந்து. முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் லக்னோவில் நடந்த சையது மோடி சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
Tags:    

Similar News