விளையாட்டு
விராட் கோலி, டு பெலிசிஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி: பெங்களூர் அணி கேப்டன் 12-ந் தேதி அறிவிப்பு

Published On 2022-03-08 19:56 IST   |   Update On 2022-03-08 19:56:00 IST
பெங்களூர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 27-ந் தேதி பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.
பெங்களூர்:

10 அணிகள் பங்கேற்கும் 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 24-ந் தேதி தொடங்கி மே 29-ந் தேதி வரை நடக்கிறது.

போட்டி அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த சீசனில் புதியதாக களம் இறங்கும் லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுலும், அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கடந்த சீசன்களில் வீராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அவர் பெங்களூர் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அணியில் ஒரு வீரராக அவர் தொடருகிறார்.

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் இதுவரை அறிவிக்கப்படவில்லை. பெங்களூர் அணி நிர்வாகம்தான் இன்னும் கேப்டன் யார் என்பதை அறிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில் பெங்களூர் அணியின் புதிய கேப்டன் யார் என்பது வருகிற 12-ந் தேதி மாலை அறிவிக்கப்படுகிறது.

அப்போது அணியின் புதிய ஜெர்சியும் அறிமுகப் படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான பாப் டுபெலிசிசுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அவர் பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப் படவுள்ளார்.

பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்தி ரேலியா ஆல்-ரவுண்டர் மேக்ஸ் வெல்லுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அணி நிர்வாகம், டுபெலிசிசை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பெங்களூர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 27-ந் தேதி பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.


Similar News