விளையாட்டு
இரட்டை ஜாக்பாட் அடித்தார் ஷிவம் டுபே
ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 கோடி ரூபாய்க்கு இந்திய வீரர் ஷிவம் டுபேவை ஏலத்தில் எடுத்துள்ளது.
பெங்களூரு:
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. ஏலப்பட்டியலில் இடம்பிடித்த வீரர்கள் எண்ணிக்கை 600 ஆனது. இதில் 377 பேர் இந்தியர்கள் ஆவர்.
தீபக் சாஹரைத் தக்கவைத்துக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடி வழங்கியது.
இதற்கிடையே, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்று வருகிறது. அதில் இந்திய வீரர் ஷிவம் டுபேவை ரூ.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்தது.
இந்நிலையில், சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர் ஷிவம் டுபேவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்...ஐ.பி.எல். வரலாற்றை தகர்த்தெறிந்த அவேஷ் கான்