விளையாட்டு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டி - இந்தியா பந்து வீச்சு தேர்வு
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியில் வாசிங்டன் சுந்தர் இடம் பெற்றுள்ளார்.
அகமதாபாத்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.
இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.
இந்திய அணி புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. இந்த தொடரில் இருந்து ரோகித் சர்மா- பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட்டணியின் புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா 2. இஷான் கிஷான் 3. விராட் கோலி 4. சூர்யகுமார் யாதவ் 5. ரிஷப் பண்ட் 6. ஷர்துல் தாகூர் 7. முகமது சிராஜ் 8. சாஹல் 9. வாசிங்டன் சுந்தர் 10. பிரசித் கிருஷ்ணா 11. தீபக் ஹூடா
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்
1. ஷாய் ஹோப் 2. பிரான்டன் கிங் 3. டேரன் பிராவோ 4. நிகோலஸ் பூரன் 5. பொல்லார்ட் (கேப்டன்) 6. ஜாசன் ஹோல்டர் 7. அலென் 8. அல்ஷாரி ஜோசப் 9. கெமார் ரோச் 10. அகேல் ஹூசைன் 11. புரூக்ஸ்