விளையாட்டு
புள்ளி எடுக்கும் முயற்சியில் தமிழ் தலைவாஸ் அணி

புரோ கபடி லீக் - புனேவை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது தமிழ் தலைவாஸ்

Published On 2022-01-01 08:22 IST   |   Update On 2022-01-01 08:22:00 IST
பெங்களூரில் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் பெங்காலை வீழ்த்தி பாட்னா அணி அபார வெற்றி பெற்றது.
பெங்களூரு:

12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. 

இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, புனேரி பால்டனுடன் மோதியது.

ஆட்டத்தின் ஆரம்பம் முதல் தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் முதல் பாதியில் 18-11 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் சுதாரித்துக் கொண்ட புனே அணியினர் 17-18 என நெருக்கடி தந்தனர். ஆனாலும் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக ஆடியது.

இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 36 - 26 என்ற புள்ளிக்கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி, முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி, 2 டிரா என 11 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6ம் இடத்தைப் பிடித்துள்ளது.

Similar News