செய்திகள்
ஷுப்மான் கில் அரைசதம்: முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 82/1
மயங்க் அகர்வால் 13 பந்தில் வெளியேறினாலும், ஷுப்மான் கில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து களத்தில் உள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் மயங்க் அகர்வால், ஷுப்மான கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 21 ரன்னாக இருக்கும்போது மயங்க் அகர்வால் 13 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து புஜாரா களம் இறங்கினார். ஒருபக்கம் புஜாரா நிலைத்து நிற்க, மறுபக்கம் ஷுப்மான் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 81 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 29 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.
ஷுப்மான் கில் 87 பந்தில் 52 ரன்களும், புஜாரா 61 பந்தில் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.