செய்திகள்
ஜாஸ் பட்லர் பந்தை சிக்சருக்கு விளாசிய காட்சி

ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்த பட்லர்... அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து

Published On 2021-10-30 17:11 GMT   |   Update On 2021-10-30 17:11 GMT
அதிரடியாக ஆடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறடித்த ஜாஸ் பட்லர் மிக வேகமாக அரை சதம் கடந்தார்.
துபாய்:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்று லீக் ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இன்று இரவு துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. 

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஆரோன் பிஞ்ச் 44 ரன்கள் சேர்த்தார். 

இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. துவக்க வீரர் ஜேசன் ராய் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அதிரடியாக ஆடி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை திணறடித்த ஜாஸ் பட்லர் 25 பந்துகளில் 4 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் மிக வேகமாக அரை சதம் கடந்தார். மறுமுனையில் டேவிட் மலன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஜாஸ் பட்லருடன், பேர்ஸ்டோ இணைந்து அதிரடி காட்ட, இங்கிலாந்து அணி 50 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்த இங்கிலாந்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஜாஸ் பட்லர் 32 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதேபோல் பேர்ஸ்டோ 11 பந்துகளில் 2 சிக்சர்களுடன் 16 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார்.
Tags:    

Similar News