செய்திகள்
நியூசிலாந்துடன் நாளை மோதல்: வெற்றி நெருக்கடியில் இந்தியா வீரர்கள் - தேர்வில் மாற்றம் செய்யப்படுமா?
நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி கடைசியாக 2020 பிப்ரவரியில் மவுண்ட் மங்கானுவில் நடந்த ஆட்டத்தில் 7 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது.
இரு அணிகளும் 20 ஓவரில் நாளை மோதுவது 17-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த போட்டிகளில் இந்தியா 8-ல், நியூசிலாந்து 8-ல் வெற்றி பெற்றுள்ளன.
கடைசியாக 2020 பிப்ரவரியில் மவுண்ட் மங்கானுவில் நடந்த ஆட்டத்தில் இந்தியா 7 ரன்னில் வெற்றி பெற்று இருந்தது. உலக கோப்பை போட்டியில் மோதிய 2 முறையும் நியூசிலாந்தே வெற்றி பெற்றிருந்தது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. 2-வது பேட்டிங் செய்யும்போது பனித்துளி காரணமாக பந்து வீசுவது சவாலாக உள்ளது. இதனால் 2-வது பேட்டிங் அணியே வெற்றி பெறுகிறது. 2 ஆட்டம் தவிர மற்ற ஆட்டங்களில் 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் அணி பெரும்பாலும் பீல்டிங்கை தேர்வு செய்கிறது.