செய்திகள்
அரை சதமடித்த ஷுப்மான் கில்

ஐபிஎல் 2021 - ஐதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

Published On 2021-10-03 22:59 IST   |   Update On 2021-10-04 18:12:00 IST
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில் அரை சதமடித்து அசத்தினார்.
துபாய்:

துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. சாகா முதல் ஓவரிலேயே எல்.பி.டபிள்யூ. மூலம் ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 10 ரன்னில் வெளியேறினார். கேன் வில்லியம்சன் 26 ரன்னில் ரன்அவுட்டானார். அப்துல் சமாத் 25 ரன்களும், பிரியம் கார்க் 21 ரன்களும் அடித்தனர்.

ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களே அடிக்க முடிந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டிம் சவுத்தி, ஷிவம் மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் அய்யர் 8 ரன்னிலும்,  ராகுல் திரிபாதி 7 ரன்னிலும்  அவுட்டாகினர்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 57 ரன்னில் வெளியேறினார். நிதிஷ் ராணா 25 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இது கொல்கத்தா அணி பெறும் 6வது வெற்றி ஆகும்.

Similar News