செய்திகள்
பேட்ஸ்மேன்கள் சொதப்பல்: கொல்கத்தாவிற்கு 116 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஐதராபாத்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீச, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களே அடிக்க முடிந்தது.
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி அந்த அணியின் ஜேசன் ராய், விருத்திமான் சாகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சாகா முதல் ஓவரிலேயே எல்.பி.டபிள்யூ. மூலம் ஆட்டமிழந்தார். ஜேசன் ராய் 10 ரன்னில் வெளியேறினார்.
கேன் வில்லியம்சன் 26 ரன்னில் ரன்அவுட் மூலம் வெளியேற, சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தடுமாற ஆரம்பித்தது. அப்துல் சமாத் 25 ரன்களும், பிரியம் கார்க் 21 ரன்களும் அடிக்க, அந்த அணியில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களே அடிக்க முடிந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டிம் சவுத்தி, ஷிம் மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையும் படியுங்கள்... போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் கைது