செய்திகள்
டேவிட் வார்னர், ஸ்மித்

20 ஓவர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு: ஸ்மித், வார்னர், கம்மின்ஸ்-க்கு இடம்

Published On 2021-08-19 10:52 GMT   |   Update On 2021-08-19 10:52 GMT
ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ் நீண்ட நாட்களாக ஓய்வில் இருக்கும் நிலையில் உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
டி20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு போட்டியை நடத்த மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்கனவே தேர்வு செய்து வைத்துள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என்றும், அதற்கான போட்டியை அட்டவணையையும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

அடுத்த மாதம் 10-ந்தேதிக்குள் டி20 உலகக்கோப்பையில் விளையாட இருக்கும் அணிகள், வீரர்களை பட்டியலை அறிவிக்க வேண்டும். நியூசிலாந்து அணி ஏற்கனவே வீரர்கள்  பட்டியலை அறிவித்துள்ளது. இந்நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய ஆடவர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி வருமாறு:-

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மிட்சல் மார்ஷ், மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ் (துனை கேப்டன்), மிட்சல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹசில்வுட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்சல் ஸ்வெப்சன், ஜோஷ் இங்லிஸ்.

டேனியல் கிறிஸ்டியன், நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக இடம் பிடித்துள்ளனர்.
Tags:    

Similar News