செய்திகள்
விம்பிள்டன்

விம்பிள்டன் டென்னிஸில் இரண்டு ஆட்டங்களில் சூதாட்டமா?: விசாரணைக்கு உத்தரவு

Published On 2021-07-14 06:55 GMT   |   Update On 2021-07-14 06:55 GMT
விம்பிள்டன் டென்னிஸில் இரண்டு ஆட்டங்களின் முடிவு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதால், சூதாட்டம் நடந்திருக்க வாய்ப்பு என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் போட்டி லண்டனில் சமீபத்தில் நடந்தது. இதன் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சும் (செர்பியா), பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டியும் (ஆஸ்திரேலியா) பட்டம் வென்றனர்.

இதற்கிடையே விம்பிள்டன் போட்டியின் இரண்டு ஆட்டங்களில் சூதாட்டம் (மேட்ச் பிக்சிங்) நடந்து இருக்கலாம் என்று சந்தேகம்  எழுந்துள்ளது. இந்த இரண்டு ஆட்டங்களிலும் மிகப்பெரிய அளவில் பெட்டிங் நடந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒற்றையர் போட்டியில் ஜெர்மனி வீரர் விளையாடிய முதல் சுற்று ஆட்டத்திலும், ஆண்கள் இரட்டையர் முதல் சுற்று  ஆட்டம் ஒன்றிலும் முடிவு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உள்ளது.

இதனால் இந்த இரண்டு ஆட்டங்களிலும் சூதாட்டம் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச டென்னிஸ் ஒருமைப்பாட்டு அமைப்பு இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.
Tags:    

Similar News