செய்திகள்
ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ் - சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

Published On 2021-07-11 23:01 IST   |   Update On 2021-07-12 07:35:00 IST
விம்பிள்டன் வெற்றியின் மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர் மற்றும் நடாலின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.
லண்டன்:

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்றது.

இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரும் செர்பியாவைச் சேர்ந்தவருமான ஜோகோவிச் 7-ஆம் நிலை வீரரும் இத்தாலியை சேர்ந்தவருமான பெரேட்டினியும் மோதினர்.

3 மணி நேரம் 23 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், ஜோகோவிச் 6-7,6-4,6-4 6-3 என்ற செட் கணக்கில் பெரேட்டினியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

நடப்பு ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் ஆகியவற்றை தொடர்ந்து விம்பிள்டனிலும் ஜோகோவிச் வாகை சூடியுள்ளார்.

Similar News