செய்திகள்
பிரதமர் மோடி

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்கள், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடல்

Published On 2021-07-11 16:21 IST   |   Update On 2021-07-11 16:21:00 IST
டோக்கியோ ஒலிம்பிக் பங்கேற்கும் இந்திய வீரர்கள் ஜப்பான் செல்ல இருக்கும் நிலையில், அவர்களுடன் பிரதமர் மோடி உரையாட இருக்கிறார்.
ஜப்பான் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுடன் பயிற்சியாளர்கள், ஸ்டாஃப்கள் ஜப்பான் செல்ல இருக்கின்றனர்.

வீரர்களின் முதல் குழு வருகிற 17-ந்தேதி டோக்கியோ புறப்பட்டு செல்ல இருக்கிறது. இந்த நிலையில் வருகிற 13-ந்தேதி இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். காணொலி காட்சி மூலம் நடைபெறும் உரையாடலில் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், துணை மந்திரி நிசித் பிரமாணிக், சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

டோக்கியோவில் வீரர்களுக்கான வசதிகள் குறித்து ஏற்கனவே பிரதமர் மோடி ஆய்வு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News