செய்திகள்
பி.வி.சிந்து

ஆல் இங்கிலாந்து ஓபன்... இந்த முறையும் அரையிறுதியில் தோல்வியடைந்த பி.வி.சிந்து

Published On 2021-03-20 22:33 IST   |   Update On 2021-03-20 22:33:00 IST
போட்டியின் துவக்கம் முதலே தாய்லாந்து வீராங்கனையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் சிந்து தடுமாறினார்.
பர்மிங்காம்:

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையுமான பி.வி.சிந்து, மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனை போன்பவி சோச்சுவாங்கை இன்று எதிர்கொண்டார். இப்போட்டியின் துவக்கம் முதலே தாய்லாந்து வீராங்கனையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் தடுமாறினார்.

இறுதியில் 17-21, 9-21 என்ற நேர்செட்களில் சிந்து தோல்வியடைந்தார். 43 நிமிடங்களில் போட்டியை முடித்து வெற்றி பெற்ற போன்பவி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

கடந்த 2018ல் நடந்த ஆல் இங்கிலாந்து போட்டியிலும் பி.வி.சிந்து அரையிறுதியில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News