செய்திகள்
ஜய் ரிச்சர்ட்சன்

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருக்கு அதிர்ஷ்டம்: பஞ்சாபிடம் ரூ. 14 கோடி தட்டிச்சென்றார்

Published On 2021-02-18 11:41 GMT   |   Update On 2021-02-18 11:41 GMT
ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜய் ரிச்சர்ட்சனை பஞ்சாப் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்களை ஏலம் எடுப்பதில் அணிகள் ஆர்வம் காட்டின. கிறிஸ் மோரிஸ் ரூ. 16.25 கோடிக்கும், முஷ்டாபிஜுர் ரஹ்மான் ரூ. 1 கோடிக்கும், நேத்தன் குல்டர்-நைல் ரூ. 5 கோடிக்கும், ஆடம் மில்னே ரூ.3.2 கோடிக்கும், உமேஷ் யாதவ் ஒரு கோடி ரூபாய்க்கும் ஏலம் போனார்கள்.

ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜய் ரிச்சர்ட்சன் ஏலம் விடப்பட்டார். அடிப்படை விலையான 1.5 கோடி ரூபாயில் இருந்து ஜெட் வேகத்தில் உயர்த்தி கேட்கப்பட்டார்.

டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அவரின் தொகையை உயர்த்தி கொண்டே இருந்தன. இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் ரூ. 14. கோடி கொடுத்து வாங்கியது. இதுவரையிலான ஏலத்தில் இது 2-வது மிகப்பெரிய தொகையாகும்.

ஜய் ரிச்சர்ட்சன் இவ்வளவு தொகைக்கு ஏலம் போவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 14 கோடி ரூபாயை தட்டிச் சென்றுள்ளார்.
Tags:    

Similar News