இது அதுல்ல.. மீண்டும் இணைந்த மாஸ் கூட்டணி - வெளியான அப்டேட் வீடியோ
காமெடி கலந்த கமர்ஷியல் படங்களை கொடுப்பதில் தேர்ந்தவர் இயக்குநர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதியின் துடிப்பான இசையில் விஷால் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ஆம்பள. சந்தானம் காமெடி இப்படத்தின் ஹைலைட்.
இதே பாணியில் சுந்தர் சி விஷால் கூட்டணியில் எடுக்கப்பட்ட மதகஜராஜா படமும் வரவேற்பை பெற்றது. ஆனால் 'ஆக்சன்' படம் சற்று சொதப்பியது.
இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தில் விஷால் கமிட் ஆகி உள்ளார். இந்த படத்திற்கு ஆம்பள இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கவுள்ளார்.
சுந்தர் சி - விஷால் - ஹிப் ஹாப் ஆதி மீண்டும் இணையும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ மூலம் அறிவித்துள்ளது.
'மூக்குத்தி அம்மன் 2' படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் சுந்தர் சி அதனை முடித்துவிட்டு விஷால் படத்தின் பணிகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கலாம்.