செண்டை மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஊர்வலம் என டி நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
பதிவு: ஜனவரி 21, 2021 17:55
டி நடராஜனுக்கு வரவேற்பு
ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் அறிமுகம் ஆன டி நடராஜன் சிறப்பாக பந்து வீசி அனைவரது பாராட்டையும் பெற்றார்.
பிரிஸ்பேன் டெஸ்டில் வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்த இந்திய அணி இன்று தாயகம் திரும்பியது. டி நடராஜன் மாலை சொந்த ஊரான சேலத்தில் உள்ள சின்னப்பம்பட்டிக்கு திரும்பினார்.
அப்போது செண்டை மேளம் முழங்க, சாரட் வண்டியில் ஊர்வலமாக அவரை வரவேற்றனர். முன்னதாக சுகாதாரத்துறை சார்பில் அவரை வரவேற்க தடைவிதிக்கப்பட்டது. கைக்குலுக்குவதற்கும், சால்வை அணிவிப்பதற்கும் தடைவிதித்தது. மேலும், 14 நட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு வரவேற்பு விழா நடத்த அமைக்கப்பட்டிருந்த மேடையையும் அகற்றியது.
Related Tags :