செய்திகள்
டீம் இந்தியா

வரலாற்று வெற்றியை ருசித்த இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் போனஸ்: பிசிசிஐ அறிவிப்பு

Published On 2021-01-19 14:06 IST   |   Update On 2021-01-19 14:06:00 IST
பிரிஸ்பேன் டெஸ்டில் வரலாற்று வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-1 என கைப்பற்றிய இந்திய அணிக்கு 5 கோடி ரூபாய் போனஸ் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. ஷுப்மான் கில் (91), ரிஷப் பண்ட் (89 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. முன்னணி வீரர்கள் இல்லாமல் தொடரை வென்றது மிகச்சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. மேலும், பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்குக்காக இந்திய அணிக்கு ஐந்து கோடி ரூபாய் போனஸ் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் தெரிவித்ததுள்ளனர். இது இந்திய கிரிக்கெட்டுக்கான சிறப்பு தருணங்கள் எனவும், எப்போதும் ஞாபகத்தில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Similar News