ஐசிசி கூட்டங்களில் பிசிசிஐ-யின் பிரதிநிதியாக ஜெய் ஷா கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐசிசி கூட்டத்தில் பிசிசிஐ-யின் பிரதிநிதியாக ஜெய் ஷா கலந்து கொள்வார்?
பதிவு: ஜனவரி 10, 2021 19:20
ஜெய் ஷா
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி உள்ளார். ஜெய் ஷா செயலாளராக உள்ளார். கடந்த வாரம் திடீரென சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. கொல்கத்தா உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சில வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐசிசி கூட்டங்களில் பிசிசிஐ சார்பில் ஜெய் ஷா கலந்து கொள்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கிறன. சவுரவ் கங்குலிதான் கலந்து கொண்டு வந்தார். அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜெய் ஷா கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட இருக்கிறது.
மேலும், உலக கோப்பை போட்டியின்போது வரி சலுகை அளிக்கும்படி மத்திய அரசிட் ஜெய் ஷா மற்றும் பொருளாளர் அருன் துமல் ஆகியோர் பேசுவார்கள் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
Related Tags :