செய்திகள்
உமேஷ் யாதவுக்கு காயம்: அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம்?
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், காயம் காரணமாக அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் டெஸ்ட் 2-வது இன்னிங்சில் 2-வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் முதல் பந்தில் ஜோ பேர்ன்ஸை வீழ்த்தினார். 4-வது ஓவரின் 3-வது பந்தை வீசும்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக வெளியேறினார். அவர் இல்லாதது இந்திய அணிக்கு சற்று பலவீனத்தை கொடுத்தது.
உமேஷ் யாதவ் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடமாட்டார். அடுத்த போட்டியிலும் விளையாடுவது சந்தேகம் என பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு ஸ்கேன் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பின்னர்தான் காயத்தின் தன்மை தெரியவரும்.
ஏற்கனவே முதல் போட்டியோடு முகமது ஷமி காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். தற்போது உமேஷ் யாதவ் காயம் அடைந்துள்ளார்.