செய்திகள்
மெஸ்சியை 644 கோல் அடிக்க வழிவிட்ட கோல் கீப்பர்களுக்கு பீர் அன்பளிப்பு
பார்சிலோனா அணிக்காக 644 கோல்கள் மெஸ்சியை அடிக்க விட்ட கோல் கீப்பர்களுக்கு அமெரிக்க நிறுவனம் பீர் பாட்டீல் அன்பளிப்பாக அனுப்பி வைத்துள்ளது.
அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சி. உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படுகிறார். இவர் ஆரம்ப காலத்தில் இருந்தே ஸ்பெயின் நாட்டின் லா லிகா புகழ் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் இவர் ரியல் வலாடோலிட் அணிக்கெதிராக ஒரு கோல் அடித்தார்.
இது பார்சிலோனா அணிக்காக மெஸ்சி அடித்த 644-வது கோல் ஆகும். இதன்மூலம் ஒரே கிளப் அணிக்காக அதிக கோல்கள் அடித்திருந்த ஜாம்பவான் பீலேயின் (643) சாதனையை முறியடித்தார்.
மெஸ்சியின் சாதனையை பாராட்டும் வகையில் அமெரிக்காவின் புட்வெஸ்சர் என்ற பீர் தயாரிக்கும் நிறுவனம் மெஸ்சி 644 கோல்கள் அடிக்கும்போது எதிரணி கோல்கீப்பராக இருந்த கோல்கீப்பர்களுக்கு பீல் பார்ட்டில்கள் அன்பளிப்பாக அனுப்பி வைத்துள்ளது.
33 வயதான மெஸ்சிக்கு இது 17-வது லா லிகா சீசன் ஆகும். 10 லா லிகா டைட்டில், நான்கு சம்பியன்ஸ் லீக், மூன்று கிளப் உலக கோப்பைகளை வென்றவர் மெஸ்சி ஆவார்.