செய்திகள்
2023 பெண்கள் உலக கோப்பை கால்பந்தில் 32 அணிகள்: தகுதி பெறும் அணிகள் அதிகரிப்பு
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 2023-ல் நடைபெற இருக்கும் பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்தில் 32 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.
பெண்களுக்கான பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2023-ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடக்க இருக்கிறது. இந்தத் தொடரில் 32 அணிகள் பங்கேற்கும் என பிபா தெரிவித்துள்ளது. இந்தத் தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கு 10 அணிகள் தகுதிபெறும்.
அணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு கால்பந்து கூட்டமைப்பில் இருந்தும் தகுதி பெறும் அணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் நேரடியாக தகுதி பெறும். யூரோப்பா கூட்டமைப்பில் இருந்து 11 அணிகளில் தகுதிபெறும். ஆசியாவில் இருந்து 6 அணிகளும், ஆப்பரிக்காவில் இருந்து நான்கு அணிகள், தென் அமெரிக்காவில் இருந்து மூன்று அணிகள், ஓசானியாவில் இருந்து ஒரு அணியும் வடக்கு, மத்திய அமெரிக்கா, கரிபீயன் கூட்டமைப்பில் இருந்து நான்கு அணிகளும் தகுதி பெறும்.
கடந்த வருடம் பிரான்சில் நடைபெற்ற உலக கோப்பையில் 24 அணிகள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.