செய்திகள்
முகமது ஷமிக்கு ஏற்பட்ட காயம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி விலகல்

Published On 2020-12-19 17:13 GMT   |   Update On 2020-12-19 17:13 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளார்.
அடிலெய்டு:

ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. 2-வது இன்னிங்ஸில் 36 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.  

முன்னதாக 2-வது இன்னிங்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சஷி பேட்டிங் செய்தபோது ஆஸ்திரேலிய வீரர் பட் கம்மின்ஸ் வீசிய பந்தில் கையில் காயம் அடைந்தார். உடனடியாக  ரிடையர்ட் ஹர்ட் முறையில் சஷி  வெளியேறினார். 

ஆட்டம் முடிந்த பிறகு ஷமியின் காயம் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ’ஷமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு ஸ்கேன் எடுத்த பிறகே தகவல் தெரிய வரும்" என்றார். 

இந்நிலையில், முகமது ஷமிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய 3 டெஸ்ட் போட்டியில் இருந்தும் முகமது ஷமி விலகியுள்ளார். இந்தத் தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முகமது ஷமி விலகியதையடுத்து அவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ்-க்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 
Tags:    

Similar News