செய்திகள்
முகமது சமி

கிழிந்த ஷூ அணிந்து பந்துவீசிய முகமது ‌ஷமி - வார்னே விளக்கம்

Published On 2020-12-19 12:30 IST   |   Update On 2020-12-19 12:30:00 IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமி நேற்றைய ஆட்டத்தில் கிழிந்த ஷூ அணிந்து கொண்டு விளையாடினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமி நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தில் கிழிந்த ஷூ அணிந்து கொண்டு விளையாடினார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இந்திய அணியின் வேகப்பந்து வீரர் முகமது ‌ஷமி நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தில் கிழிந்த ஷூ அணிந்து கொண்டு விளையாடினார். 17 ஓவர்களை வீசி, 41 ரன்களை கொடுத்தார். விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. ஆனால் அவரது பந்துவீச்சு மிகவும் நேர்த்தியாக இருந்தது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

முகமது ‌ஷமி இடதுகாலில் கிழிந்த ஷூவை அணிந்து கொண்டு விளையாடிதை ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாக பகிர்ந்து இருந்தனர். அவர் கிழிந்த ஷூவுடன் பந்து வீசியது ஏன் என்பதற்கு, ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் வார்னே விளக்கம் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

வியூகத்தின் அடிப்படையில் முகமது ‌ஷமி கிழிந்த ஷூ அணிந்து விளையாடி உள்ளார். வீரரை நோக்கி பந்து வீசும் போது சரியான பிடிமானத்தில் சென்று சேர வேண்டும் என்பதால் அவர் அவ்வாறு செய்திருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அணிக்காக ‌ஷமியின் அர்ப்பணிப்பை பார்த்த ரசிகர்கள் வலைதளத்தில் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Similar News