செய்திகள்
பகல்-இரவு டெஸ்ட்

ஆஸ்திரேலியா - இந்தியா டே-நைட் டெஸ்ட் போட்டியை காண 27 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி

Published On 2020-11-10 16:13 IST   |   Update On 2020-11-10 16:13:00 IST
அடிலெய்டில் டிசம்பர் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும் டே-நைட் டெஸ்ட் போட்டியை காண 27 ஆயிரம் ரசிர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது.

முதலில் ஒருநாள் கிரிக்கெட் தொடரும், அதன்பின் டி20 கிரிக்கெட் தொடரும் நடைபெறுகிறது. கடைசியாக டிசம்பர் 17-ந்தேதி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டி அடிலெய்டில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இந்த போட்டியை காண 50 சதவீதம், அதாவது 27 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் ஒவ்வொரு நாளும் தலா 27 ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது சூழ்நிலைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

Similar News